திண்டிவனம் சந்திரமவுலீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2019 02:04
திண்டிவனம்: கீழ்பசார் சந்திரமவுலீஸ்வரர் கோவிலில், சித்திரை திருவிழாவை முன்னிட்டு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திண்டிவனம் அடுத்த கீழ்பசார் கிராமத்தில் சந்திரமவுலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், சித்திரை திருவிழா நேற்று முன்தினம் (ஏப்., 20ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி, சந்திரமவுலீஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவத் திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முன்னதாக மாலை 4:00 மணிக்கு கஜ பூஜை, புண்ணிய வாகனம், கலச பூஜை, ஆச்சார்ய பூஜைகள் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, சந்திரமவுலீஸ் வரருக்கும், மரகதாம்பிகைக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சந்திரமவுலீஸ்வரர் சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.