பதிவு செய்த நாள்
25
ஏப்
2019
03:04
திருப்பூர் : திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில், வைகாசி விகாசத்தேர்த்திருவிழா, மே 12ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
திருப்பூர் நகரின் மத்தியில் அமைந்துள்ள ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில்களில், வைகாசி விசாக தேர்த்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. வரும் வைகாசி தேர்த்திருவிழா, மே 18 மற்றும் 19 ம் தேதிகளில் நடக்க உள்ளது.முதல்கட்டமாக, தேர்களை தயார்படுத்தும் பணி துவங்கியுள்ளது. தேர்நிலைகள் பிரிக்கப்பட்டு, இரண்டு தேர்களும் சுத்தம் செய்யப்பட்டு வருகின்றன. நாளை காலை, 11:00 மணிக்கு, இரண்டு தேர்களுக்கும் முகூர்த்தக்கால் நடும் வழிபாடு நடக்க உள்ளது.வரும், மே 12ம் தேதி காலை, விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப்பெருமாள் கோவில்களில், கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது.சூரிய, சந்திர மண்டல காட்சிகள், கற்பக விருட்சம், அதிகாரநந்தி, கருடவாகன சேவை, ஆதிசேஷ வாகன சேவை உள்ளிட்ட வாகன சேவைகளை தொடர்ந்து, பஞ்சமூர்த்தி புறப்பாடு நிகழ்ச்சி விமரிசையாக நடக்கும்.மே 18ம் தேதி, மாலை, 3:00 மணிக்கு ஸ்ரீ விஸ்வேஸ்வரர் தேரோட்டமும், 19ம் தேதி மாலை, 3:00 மணிக்கு, வீரராகவ பெருமாள் கோவில் தேரோட்டமும் நடக்க உள்ளது.