கடலூர்: திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயர் கோவில் சித்திரை திருவிழா வரும் மே 5ம் தேதி வரை நடக்கிறது.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்ச நேயர் கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதத்தில் 13 நாட்கள் உற்சவம் நடப்பது வழக்கம். இதன்படி இந்தாண்டு, 23ல் துவங்கிய சித்திரை திருவிழா வரும் மே 5ம் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் தினம் காலையில் திருமஞ்சனமும், தீபாராதனையும் நடைபெறும். இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை தக்கர் முத்துலட்சுமி, செயலர் அலுவலர் நாகராஜன் செய்து வருகின்றனர்.