போடி, போடி அருகே பத்திரகாளிபுரம் பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி காவடி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.
போடி அருகே பத்திரகாளிபுரத்தில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா ஐந்து நாட்கள் வெகுவிமர்சையாக நடைபெறும். மூன்று நாட்களாக தேனி மாவட்ட மக்கள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்து பத்திரகாளியம்மனை தரிசித்து வருவதோடு, காவடி, அக்னி சட்டி, பால்குடம் எடுத்து நேர்த்தி கடனை செலுத்தி வருகின்றனர். பலர் உருண்டு கொடுப்பதோடு, அலகு குத்தி வருதல், மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபட்டனர். பலரும் கிடாவெட்டி தங்களது நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். திருவிழா தொடர்ந்து இரண்டு நாட்கள் நடக்கிறது.