அட்சயதிருதியை முன்னிட்டு வராஹ தேசிகன் சுவாமி விஜயம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2019 12:05
திருப்புல்லாணி: ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தின் தற்போதைய பீடாதிபதியான ஸ்ரீவராஹ தேசிகன் சுவாமி திருப்புல்லாணிக்கு விஜயம் செய்தார்.
திருப்புல்லாணி ஆதிஜெகநாதப்பெருமாள் சமேத பத்மாஸனித்தாயார் கோயில் வைணவ திவ்யதேசங்களில் 44வதாக திகழ்கிறது நேற்று முன்தினம் மாலையில் திருப்புல்லாணி ஆண்டவன் ஆசிரமத்திற்கு விஜயம் செய்த தற்போதைய ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்திற்கு பீடாதிபதியான ஸ்ரீ வராஹ மகா தேசிகன் ஸ்வாமிகளுக்கு திருப்புல்லாணி எல்லையில் வைத்து ராமநாதபுரம் சமஸ்தான, தேவஸ்தானத்தின் சார்பில் பூரண கும்ப மரியாதை செய்யப்பட்டது. கோயில் பேஷ்கார் கண்ணன் தலைமை வகித்தார். ஆசிரமத்தின் நிர்வாகி ரகுவீரதயாள் முன்னிலை வகித்தார்.
நேற்று காலையில் சேதுக்கரை கடற்கரையில் தனது சீடர்களுடன் புனித நீராடினார். வருகிற மே 7ம் தேதி வரை ஆண்டவன் ஆசிரம மண்டகப்படியில் நடக்கும் அட்சயதிருதியை கருட வாகனத்தில் புறப்பாடு முடிந்து பொள்ளாச்சி செல்கிறார். தினமும் காலையில் ஆண்டவன் ஆசிரமத்தில் விஷேச பூஜைகள் நடந்து வருகிறது. இவரிடம் ஆசி வாங்குவதற்காக ராமநாதபுரம் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.