மயிலம்: மயிலம் அடுத்த நல்லாமூர் கங்கையம்மன் கோவில் சித்திரை திருவிழா நடந்தது. மயிலம் அடுத்த நல்லாமூர் கங்கையம்மன் கோவில் சித்திரை விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கிராம குளக்கரையிலிருந்து பூங்கரகம் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். காலை 10 மணிக்கு அம்மனுக்கு பால், சந்தனம், இளநீர் அபிஷேகம் நடந்தது. மதியம் 12 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது.