பதிவு செய்த நாள்
03
மே
2019
12:05
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில், புஷ்ப பல்லக்குடன் பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.பெருமாளின், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் மட்டும்தான், பெருமாள் எட்டு திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவம், ஏப்., 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.விடையாற்றி உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று முன்தினம், காலை திருமஞ்சனம் நடந்தது. இரவு, 7.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில், உப நாச்சியாருடன், பெருமாள் எழுந்தருளினார். அஷ்டபுஜபெருமாள் கோவில் மாட வீதி, திருக்கச்சி நம்பி தெருவழியாக, வரதராஜ பெருமாள் கோவில் சன்னதி தெரு ராஜகோபுரம் வரை சென்று, மீண்டும் கோவிலை வந்தடைந்தார். வழிநெடுகிலும் பக்தர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து பக்தி பரவசத்துடன் சுவாமி வழிபட்டனர்.