பதிவு செய்த நாள்
04
மே
2019
02:05
அரூர்: அரூர் அருகே, மழை வேண்டி பெண்கள் ஒப்பாரி வைத்து, மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தினர். தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்துள்ளது கூக் கடப்பட்டி கிராமம். இங்கு, மழை வேண்டி பெண்கள் தொடர்ந்து, மூன்று நாட்கள் ஒப்பாரி வைத்து, கோவிலில் வழிபாடு நடத்தினர். இது குறித்து, அப் பகுதி பெண்கள் கூறியதாவது: தற்போதுள்ள கடும் வறட்சியால் விவசாய தொழில் பாதித்து, கால்நடைகளுக்கும் தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
குடிநீர் கிடைக்காமல், மக்கள் அவதிப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, மழை வேண்டி கடந்த மூன்று நாட்களாக, தொடர்ந்து, இரவில் ஒப்பாரி வைத்து வழிபாடு நடத்தினோம். ஊரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழுவாகச்சென்று, புதிதாக சமைத்த சாதம், களி உள்ளிட்ட உணவுப் பொருட்களை சேகரிப்போம். பின், அவற்றை கொண்டு வந்து மாரியம்மன் கோவிலில் வைத்து, ஒப்பாரியில் ஈடுபடுவோம். சேகரித்த உணவுப்பொருட்களை அம்மன் மற்றும் வேடியப்பன் சுவாமிக்கு படைத்து, மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இவ்வாறு, செய்தால் மழை பெய்யும் என்பது ஐதீகம். இவ்வாறு அவர்கள் கூறினர்.