பதிவு செய்த நாள்
04
மே
2019
02:05
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி, பிளேக் மாரியம்மன் வகையறா கோவில் சித்திரை விழாவில், நான்காம் நாளான நேற்று (மே., 3ல்), ஊத்துக்குளி அம்மன் கோவில் முன், பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து, பெண்கள் வழிபட்டனர். முன்னதாக, 300க்கும் மேற்பட்ட பெண்கள், பச்சரிசி மாவு மற்றும் பூஜை பொருட்களை தட்டில் வைத்து, மேள, தாளம் முழங்க, முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர். பின், ஊத்துக்குளி அம்மன் கோவிலில், மாவிளக்கு பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.