சித்திரை அமாவாசை: ராமேஸ்வரத்தில் பக்தர்கள் நீராடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2019 04:05
ராமேஸ்வரம்:நேற்று சித்திரை அமாவாசையை யொட்டி தமிழகத்தில் பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். பின் பக்தர்கள் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய வேண்டி புரோகிதர்கள் மூலம் திதி பூஜை செய்து, அக்னி தீர்த்த கடலில் சிவசிவ கோஷமிட்டபடி புனித நீராடினார்கள்.
பின் கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடினார்கள். கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் காத்திருந்து பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். *சேதுக்கரையில் சேதுபந்தன ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் மன்னார் வளைகுடா கடலோரத்தில் அமைந்துள்ளது. இங்கு நேற்று அமாவாசையை முன்னிட்டு முன்னோருக்கு திதி, தர்ப்பணம், பித்ருக்கடன் உள்ளிட்டசங்கல்ப பூஜைகளை செய்து வழிபாடு செய்தனர்.