வாடிப்பட்டி:வாடிப்பட்டி அருகே கச்சைகட்டி பெரியார் நகர் மாரியம்மன் கோயில் சித்திரை பெருவிழா ஏப்.,29ல் துவங்கி 5 நாட்கள் நடந்தது. திருவிளக்கு பூஜை, மாவிளக்கு சேத்தாண்டி வேஷம், பால்குடம், அக்னிசட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர். அன்னதானம் நடந்தது.