திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05மே 2019 04:05
கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி பிடாரி அம்மனுக்கு நன்னீராட்டு அபிஷேகம் நடந்தது.
கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் உலக நன்மை வேண்டி, பிடாரி அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக தெப்பக் குளத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் தண்ணீர் எடுத்துச் சென்று, அம்மனுக்கு நன்னீராட்டு அபிஷேகம் நடைபெற்றது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.