இளையான்குடி:தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில், மழை வேண்டி நேற்று யாகவேள்வி நடந்தது.இளையான்குடி, தாயமங்கலம் உட்பட அனைத்து பகுதிகளிலும் கடந்த பல வருடங்களாக போதிய மழை இல்லை. மக்களின் குடிநீர் ஆதாரமும், விவசாயமும் முற்றிலும் பாதிக்கப்பட்டது. விலங்குகள், பறவைகள் கண்மாய், குளங்களில் நீர் இல்லாததால் ஆங்காங்கே செத்து மடிகின்றன. தற்போது வெயிலால், மக்கள் வெளியில் நடமாட கூட அஞ்சுகின்றனர்.அனைத்து பகுதிகளிலும் மழை பெய்ய வேண்டி, நேற்றுகாலை தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலில் சிறப்பு யாகவேள்வி நடந்தது. பரம்பரை அறங்காவலர் மு.வெங்கடேசன் செட்டியார், தலைமையில் நடத்தப்பட்ட யாகவேள்வியில் பக்தர்கள் சுற்று வட்டார கிராம மக்கள் கலந்து கொண்டனர்.