பதிவு செய்த நாள்
06
மே
2019
01:05
ஸ்ரீபெரும்புதுார்: ராமானுஜர், 1,002ம் ஆண்டு திருஅவதார விழாவின், 6ம் நாளான நேற்று, கூரேசவிஜயம் நடந்தது. குதிரை வாகனத்தில், ராமானுஜர் வீதி உலா சென்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஸ்ரீபெரும்புதுாரில், வைணவ மகான் ராமானுஜரின், 1,002ம் ஆண்டு, திருஅவதார உற்சவ விழா, 30ம் தேதி துவங்கியது.
விழாவின் ஆறாவது நாளான நேற்று, கூரேசவிஜயம் நடந்தது.ராமானுஜர், ஆண்டு முழுவதும் காவி உடையில் தான் காட்சி தருவார். ஆனால், கூரேசவிஜயம் நாளில் மட்டும், வெள்ளை ஆடை அணிந்து குதிரை வாகனத்தில் வீதி உலா செல்வார்.ராமானுஜரின் சீடரான கூரத்தாழ்வான், ராமானுஜருக்காக உருமாறி சென்று, வைணவத்திற்காக தன் கண்களை இழந்தார்.இந்த நிகழ்வை குறிக்கும் வகையில், ஆண்டுதோறும் ராமானுஜர் உற்சவ விழாவின் போது, 6ம் நாள் கூரேசவிஜயம் கொண்டாடப்படுகிறது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.