பதிவு செய்த நாள்
06
மே
2019
03:05
பெ.நா.பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம், கொட்டவாடி மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி, நேற்று (மே., 5ல்), பால்குட ஊர்வலம் நடந்தது.
மகாசக்தி மாரியம்மன் கோவிலில், இரவு, 7:00 மணிக்கு மேல், ஏராளமான பெண்கள், பால்குடம் எடுத்துக்கொண்டு, பம்பை மேளம் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று, கோவிலை அடைந்தனர். தொடர்ந்து, அங்குள்ள மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. இன்று (மே., 6ல்) காலை, கோவில் வளாகத்தில் உருளுதண்டம் போடுதல், மாலை, திருவிளக்கு பூஜை நடக்கிறது.