அட்சய திரிதியை: காலடி கிருஷ்ணன் கோயிலில் கனகதாரா யாகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07மே 2019 10:05
காலடி: கேரளா எர்ணாகுளம் அருகிலுள்ள காலடியில் ஆதிசங்கரர் அவதரித்தார். இங்கு திருக்காலடியப்பன் என்ற கிருஷ்ணன் கோயில் உள்ளது.
இக்கோயிலில் அட்சயதிரிதியை முன்னிட்டு ஆண்டுதோறும் கனகதாரா யாகம் நடக்கிறது. கடந்த மே 5ல், யாகம் துவங்கியது. ஆதிசங்கரரின் 32 வயதை குறிக்கும் வகையில், 32 நம்பூதிரிகள் யாகத்தை நடத்தினர். இந்த யாகத்தில் லட்சுமி யந்திரமும், தங்கம் மற்றும் வெள்ளி நெல்லிக்கனிகள் வைத்து, 10008 கனகதாரா ஸ்தோத்திரம் ஜபிக்கப்பட்டது. அட்சய திரிதியை தினமான இன்று (7ம் தேதி) காலை கணபதி வழிபாடு, விஷ்ணு சகஸ்ர நாமத்திற்கு பின் காலை 9 மணிக்கு தங்க நெல்லிக்கனிகளால் விஷ்ணு, லட்சுமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. மே 9ல் ஆதிசங்கர ஜெயந்தியுடன் விழா நிறைவடைகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி நெல்லிக்கனிகள் பிரசாதமாக கோயிலில் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்புக்கு: 093888 62321