வில்லியனுார்:வில்லியனுார் சத்குரு ராமபரதேசி சுவாமிகள் மகா குரு பூஜை விழா நேற்று நடந்தது.
வில்லியனுார், மூலக்கடை எம்.ஜி.ஆர்., சிலை அருகே சத்குரு ராமபரதேசி சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்துள்ளது. சத்குரு ராமபரதேசி சுவாமிகள் 152 ஆம் ஆண்டு மகா குரு பூஜை விழா நேற்று முன்தினம் துவங்கியது. காலையில் சிறப்பு அபிஷேகமும், இரவு 7:30 மணியளவில் ராமபரதேசி சுவாமிகள் திருவுருவப்படம் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில் இசை முழங்க வில்லியனுார் மாட வீதியுலா நடந்தது.நேற்று 6ம் தேதி காலை 6:00 மணியளவில் அரும்பார்த்தபுரம் சமரச சுத்த சன்மார்க்க சக்திய ஆன்மீக வழிபாட்டுச் சபையினரின் பாராயணம் நடந்தது. காலை 10:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், பகல் 12:00 மணிக்கு மகா குரு பூஜையை தொடர்ந்து அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை 6:00 மணியளவில் பக்தி இசை நிகழ்ச்சி நடந்தது.