கூடலுார்: வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. இதற்காக கூடலுாரில் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி எடுத்து வடக்கு போலீஸ் ஸ்டஷேன் அருகே உள்ள காளியம்மன் கோயில் வரை ஊர்வலமாக வந்தனர்.அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பின்னர் வீரபாண்டி புறப்பட்டனர். பக்தர்களுக்காக கூடலுார் தேசிய நெடுஞ்சாலையின் இரு பகுதிகளிலும், பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சார்பில் பந்தல் அமைத்து குடிநீர், நீர்மோர் வழங்கப்பட்டது.