மேட்டுப்பாளையம்:மழை வேண்டி பவானி ஆற்றில் வருண யாகம் நடந்தது.கோவை மாவட்டத்தில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
பவானி ஆற்றங்கரையோரம் வனப்பத்திரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. மழை வேண்டி கோவிலில் அம்மனுக்கு, ஆயிரத்து எட்டு குடங்களில் சிறப்பு அபிஷேகமும் ஆராதனையும் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்து, வருண யாகம் நடத்தினர். பின்பு, பவானி ஆற்று நீரில் சிவாச்சாரியர்கள் நின்று பூக்களை துாவி வருண ஜெபம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில் கோவில் உதவி கமிஷனர் ராமு, பரம்பரை அறங்காவலர் வசந்தா மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். கோபி பாரியூர் அமரபரணீஸ்வரர் கோவில் மயூரநாதன் சிவாச்சாரியார் தலைமையில், சிவாச்சாரியார்கள் யாக வேள்வி நடத்தினர். திரளான பக்தர்கள் பவானி ஆற்றங்கரையில் திரண்டு யாகத்தில் பங்கேற்றனர்.