பதிவு செய்த நாள்
08
மே
2019
03:05
ஈரோடு: பவானி அருகேயுள்ள, சித்தார் சக்தி மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா, நேற்று தொடங்கியது.
இதையொட்டி காவிரி ஆற்றில் இருந்து, வாணவேடிக்கையுடன், மின் விளக்கு அலங்காரத்தில் சுவாமி ஊர்வலம் நடந்தது. தீ மிதிக்கும் நிகழ்வு இன்று நடக்கிறது. இதை முன்னிட்டு, காவிரி
ஆற்றுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது.
இதை தொடர்ந்து காலை, 10:00 மணிக்கு பூவோடு எடுத்து, குண்டம் இறங்கி, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவர். இரவு, 8:00 மணிக்கு பாரா நடத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை
(மே., 9ல்) காலை, பொங்கல் வைபவம், முப்போடு அழைப்புடன் மாவிளக்கு ஊர்வலம், மாலையில் அக்னி சட்டி ஊர்வலம் நடக்கிறது.
இதில் அலகு குத்தியும், பக்தர்கள் பங்கேற்பர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்கின்றனர்.