பதிவு செய்த நாள்
09
மே
2019
04:05
காஞ்சிபுரம்:வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு ராஜகோபுர வழியை, நிரந்தரமாக திறக்க வேண்டும் என, ஹிந்து அறநிலையத் துறை ஆணையரிடம், பக்தர் ஒருவர் மனு
அளித்தார்.
இது குறித்து, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தேவதாஸ் என்பவர், அறநிலையத் துறை ஆணையரி டம் அளித்த மனு விபரம்:காஞ்சிபுரத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில், இரு ராஜ கோபுரங்கள் உள்ளன. கடந்த, 100 ஆண்டுகளுக்கு முன், கிழக்கு ராஜகோபுரம் தான், பிரதான வழியாக இருந்தது.ஆனால், மேற்கு பகுதி யில், மக்கள் குடியிருப்பும் நகரின் வளர்ச்சியும் இருந்ததால், மேற்கு ராஜகோபுரத்தையே, அனைவரும் பயன்படுத்த துவங்கினர்.
தற்போது, அதுவே பிரதான வழியாக பயன்பாட்டில் உள்ளது.பாதுகாப்பு கருதி, கிழக்கு ராஜகோபுர வழியை மூடி வைத்துள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவிக்கிறது. ஆனால்,
பழைய முறைபடி, கிழக்கு ராஜகோபுரம் கதவையும் திறக்க வேண்டும்.