சித்திரை திருவிழாவுக்காக வீரபாண்டியில் குவியும் பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
09மே 2019 04:05
தேனி: வீரபாண்டி கோயில் சித்திரை திருவிழாவில் அம்மனுக்கு பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செலுத்தி பக்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா நேற்று முன்தினம் (மே., 7ல்) துவங்கியது. நேர்த்திக்கடன் செலுத்தவும், அம்மனை தரிசிக்கவும் மாவட்டம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகின்றனர். அம்மன் வேடமிட்டும், ஏராளமானோர் காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். முக்கிய நிகழ்வாக நாளை மாலையில் (10ம் தேதி) தேரோட்டம் நடக்கிறது. அம்மன் நேற்று (மே., 8ல்) முத்து பல்லக்கில் வீதி உலா வந்து மண்டகப்படிகளில் எழுந்தருளினார். இன்று (மே., 9ல்) புஷ்பபல்லக்கில் வீதி உலா வருகிறார். பைபாசில் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது பக்தர்களுக்கு சிரமம் குறைந்து என்றாலும் அதே ரோட்டின் அருகே வாகன நிறுத்தமும், பஸ்கள் நிறுத்தி பயணிகளை இறங்கி விடுவதும் இடையூறாக உள்ளது. பைபாசில் போக்குவரத்தை முறைப்படுத்த வேண்டும்.
சிரமம்: முல்லை பெரியாறு அணைக்கு கீழே பக்தர்கள் நீராடி அக்னி சட்டி வளர்ந்து மேளதாளங்கள் முழங்க ஆடிப்பாடி கோயிலுக்கு வருவது வழக்கம். இந்த ஆண்டு ஆற்றில் நீர் வரத்து மிக குறைவாக இருப்பதால் தடுப்பணையின் மேற்பகுதிக்கு சென்று குளித்து வரு கின்றனர். இதனால் சிலர் தவறி விழுகின்றனர். மேலும் குறைந்தளவு நீரில் ஏராளமானோர் நீராடுவதால் சுகாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. பக்தர்கள் வசதிக்காக பெரியாறு அணையில் இருந்து கூடுதல் நீர் திறக்க கோரியுள்ளனர்.