பதிவு செய்த நாள்
09
மே
2019
04:05
நகரி:சித்தூர் மாவட்டம், காணிப்பாக்கம் பகுதியில், சுயம்பு வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து
செல்கின்றனர்.
பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்காக, ரொக்கம், தங்கம், வெள்ளி மற்றும் வெளிநாட்டு நாணயங்களை உண்டியலில் செலுத்தினர்.கடந்த, 14 நாட்களில், பக்தர்கள் செலுத்திய
காணிக்கையை கோவில் அதிகாரி பூர்ணசந்திர ராவ் முன்னிலையில் கோவில் ஊழியர்கள், பணத்தை பிரித்து எண்ணினர்.இதில், 48 லட்சத்து, 91 ஆயிரத்து, 184 ரூபாய் ரொக்கம், 24 கிராம் தங்கம், 540 கிராம் வெள்ளி மற்றும் 65 வெளிநாட்டு நாணயங்கள்இருந்தன.