Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதைந்த நிலையில் மலைப்பட்டி கோயில்: ... சோலைமலை முருகன் கோவிலில் வசந்த உற்ஸவ விழா சோலைமலை முருகன் கோவிலில் வசந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரியில் அறநிலைய கமிஷனர் தினமலர் செய்தி எதிரொலி
எழுத்தின் அளவு:
சதுரகிரியில் அறநிலைய கமிஷனர் தினமலர் செய்தி எதிரொலி

பதிவு செய்த நாள்

10 மே
2019
12:05

ஸ்ரீவில்லிபுத்தூர்:தினமலர் செய்தி எதிரொலியாக, சதுரகிரி மலைக் கோவிலில், இந்து சமய அறநிலையத் துறை கமிஷனர் பனீந்திரரெட்டி ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில், தனியார் அன்னதான மடங்கள் அறநிலையத் துறையினரால் மூடப்பட்டதால், பக்தர்கள், உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல், அவதிப்பட்டு வந்தனர்.இதனால், மலைப் பகுதி ஓட்டல்களில், உணவுகள், அதிக விலைக்கும், 1 லிட்டர் தண்ணீர், 40 முதல், 60 ரூபாய் வரையும் விற்கப்பட்டது. பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இது தொடர்பாக, மே, 4ல், தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, இப்பிரச்னை குறித்து ஆய்வு செய்ய, இந்து அறநிலையத்துறை கமிஷனர் பனீந்திரரெட்டி, நேற்று (மே., 9ல்) காலை, 6:40 மணிக்கு, சதுரகிரி மலையடிவாரமான தாணிப்பாறை வந்தார். மாவட்ட வனஅலுவலர் முகமது ஷாபாப்புடன் ஆலோசனை நடத்தினார்.

கமிஷனர் கூறுகையில், சதுரகிரியில் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதாக வந்த, தினமலர் செய்தியை தொடர்ந்து, நேரில் ஆய்வு செய்ய வந்துள்ளேன். பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும், என்றார்.பின், கமிஷனர் மற்றும் அதிகாரிகள் குழுவினர் மலையேறினர். கோவிலில் இரவு தங்கிய கமிஷனர், இன்று (மே., 10ல்) காலை திரும்புகிறார்.

பக்தர்களுக்கு பட்டினிஅதிகாரிகளுக்கு விருந்து

கடந்த வாரம், சித்திரை அமாவாசையை முன்னிட்டு, மலையேறிய பக்தர்கள், போதிய உணவு, தண்ணீரின்றி, பட்டினியுடன் கோவிலுக்கு சென்று திரும்பினர். அவர்களுக்கு அறநிலையத் துறை சார்பில், எவ்வித வசதியும் செய்து தராததால், கடும் சிரமத்திற்குள்ளாகினர்.துறையின் உயரதிகாரி ஆய்விற்கு வருகிறார் என்றதும், மினரல் வாட்டர், உணவு வகைகள், உணவு தயாரிக்க தேவையான பொருட்கள், போர்வை உட்பட பல பொருட்கள், தலைச் சுமையாக மலைக்கு எடுத்துச் செல்லபட்டன. இது, பக்தர்களிடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் பழமையும் புரதான சிறப்பையும் பெற்ற சிவாலயம் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
சோழவரம்: சோழவரம் அடுத்த எருமைவெட்டிப்பாளையம் கிராமத்தில், காமாட்சி அம்பாள் சமேத வரமுக்தீஸ்வரர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  தமிழகத்தில் உள்ள பழமையான 18 சைவ ஆதினங்கள் ஒன்றான சூரியனார் கோவில், சிவாக்கிர யோகிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar