வேடசந்தூர்: வேடசந்தூர் அருகே அடைக்கனூரில் காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. கரகம் பாலித்தல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடந்தன. கோயில் பூசாரி அம்மையப்பன் அரிவாள் மீது ஏறிநின்று அருள்வாக்கு கூறினார். ஆணிகள் அடித்த நாற்காலியில் உட்கார்ந்து, ஆணிச் செருப்பை அணிந்தபடி பக்தர்களுக்கு அருள்வாக்கு அளித்தார். திரளானோர் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.
செம்பட்டி: காமுபிள்ளை சத்திரத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், அம்மன் அழைப்பு, கண் திறப்பு, சிறப்பு பூஜை, ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், அக்னிச்சட்டி எடுத்தல், பொங்கல் வழிபாடு, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை செலுத்தினர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.