அலங்காநல்லுார் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் வைகாசி மாத வசந்த உற்ஸவ திருவிழா மே 9ல் தொடங்கியது.இதையொட்டி ஸ்ரீ தேவி, பூதேவியுடன் சுந்தரராஜபெருமாள் பல்லக்கில் எழுந்தருளி, 18ம் படி கருப்பணசாமி சன்னதி வழியாக வந்து வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு விஷேச பூஜை, தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி அதே பரிவாரங்களுடன் புறப்பாடாகி இருப்பிடம் சேர்ந்தார். இவ்விழா மே 18ல் நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.