திருப்புத்தூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் அத்தலத்தில் ஓம் நமோ நாராயணாய எனும் அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்த உடையவர் எம்பெருமானார் திருநட்சத்திரம் கொண்டாடப்பட்டது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் அஷ்டாங்க விமானம் அருகே நின்று ராமானுஜர் உலகிற்கு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார். இங்கு அவருக்கு தனி சன்னதி உண்டு. ராமானுஜர் சன்னதியிலிருந்து உடையவர் பட்டாடை அணிந்து, சர்வ ஆபரண அலங்காரத்துடன் மூலவர் சன்னதி எழுந்தருளினார். அங்கு தீர்த்தம்,சந்தனம், மாலை, சடாரி மரியாதைகளுடன் பரிவட்டம் செலுத்தப்பட்டது. பிறகு புறப்பாடாகி பிரகார வலம் வந்தார். பக்தர்கள் அலங்காரத்தில் எழுந்தருளிய எம்பெருமானை தரிசித்தனர்.