மடத்துக்குளம் அருகே, கன்னியம்மன் கும்பாபிஷேக ஆண்டு விழா,
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மே 2019 03:05
மடத்துக்குளம்:மடத்துக்குளம் அருகே, சாலரப்பட்டி கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேக ஆண்டு விழா, வரும் 13ம் தேதி நடக்கிறது.இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து, ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது. இதை சிறப்பிக்கும் விதமாக, முதலாம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடக்கிறது.நாளை (12ம் தேதி) காலை, 10:00 மணிக்கு திருமூர்த்திமலை சென்று தீர்த்தம் கொண்டு வருதல், 13ம் தேதி காலை, 5:30 மணிக்கு சப்பரம் கங்கை பூஜைக்கு செல்லுதல், 6:00 மணிக்கு மங்கள இசை விநாயகர் வழிபாடு, காயத்ரி ஹோமம், கலச அபிஷேகம், மகா தீபாராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடக்கிறது.