மயிலாடுதுறை: திருமணஞ்சேரி திருமண தடை நீக்கும் அருளிமிகு கல்யாண சுந்தரேஸ்வர் கோயில் திருக்கல்யாண உற்சவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருமணஞ்சேரி கிராமத்தில் கோகிலாம்பாள் உடனாகிய கல்யாண சுந்தரேஸ்வர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. தேவார ப்பாடல் பெற்ற இந்த கோயிலில் சுவாமி சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சுவாமி, அம்பாளை திருணம் செய்துகொண்டது ஐதீகம். திருமண வ ரம் வேண்டுவோர் இந்த கோயிலில் சுவாமி, அம்பாளுக்கு கல்யாண அர்ச்சனை செய்து, மாலை சாத்தி வழிபட்டால் தடைகள் யாவும் நீங்கி திருமணம் நடைபெரும். இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 9ம் தேதி தொடங்கி 15 ம் தேதி வரை நடைபெறுகிறது.
இவ்விழாவின் முக்கிய திருவிழாவான திருக்கல்யாண உற்சவம் பூச நட்டத்தி ரத்திரமான நேற்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி, அம்பாள் கோயிலின் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து சிவாச்சாரி யார்கள் வேதமந்திரங்கள் ஓத, சுவாமி, அம்பாளுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கும் திருக்கல்யாண வைபோகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி, அம்பாளை வழி பட்டனர். விழா ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் பொன்னழகு மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர். திருக்கல்யாணத்தை முன்னிட்டு குத்தாலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.