பெரியகுளம்: பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் லட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் ராமானுஜரின் 1,002 வது பிறந்த நாள் விழா (திருநட்சத்திர தினம்) நடந்தது. ராமானுஜர் சன்னதியில் பால், தயிர், பன்னீர், இளநீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.
மூலவர் சன்னதியில் உற்ஸவரான ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், கிருஷ்ணர், லட்சுமிநாராயணப்பெருமாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டது.
பக்தர்கள் நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடினர். ஏராளமானோர் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அர்ச்சகர் ராமானுஜர், கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.
கூடலூர்: ராமானுஜருக்கு 1002 வது திருநட்சத்திர தினமான திருவாதிரையை முன்னிட்டு, கூடலூர் கூடலழகிய பெருமாள் கோயிலில் சிறப்பு திருமஞ்சனம் மற்றும் ஆராதனை நடந்தது.
ராமானுஜருக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. நாலாயிரம் திவ்ய பிரபந்தம் பாடப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்தனர்.