காஞ்சிபுரம்: காஞ்சி புராணத்தை இயற்றிய, மாதவ சிவஞான சுவாமிகளின் குருபூஜை விழா, காஞ்சிபுரம் திருக்கயிலாய பரம்ரை திருவாவடுதுறை ஆதீனம் கிளை மடத்தில், நேற்று (மே., 12ல்)நடந்தது.
காலை, 8:30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து, திருமுறை விண்ணப்பம், சொற்பொழிவு, மாகேஸ்வர பூஜையும் நடந்தது.ஆதின வித்வான் க.வச்சிரவேல் எழுதிய, சிவஞானபோதத் திறவு என்ற விழா மலர் வெளியிடப்பட்டது.