அலங்காநல்லுார்: அலங்காநல்லுார் அருகே கொண்டையம்பட்டி தில்லைகாளியம்மன் கோயிலில் வளைகாப்பு திருவிழா நடந்தது.ஏராளமான பக்தர்கள் பால்குடம், அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. நவதானிய களி உட்பட 24 வகையான உணவுகள், வண்ண வளையல்கள், சேலைகள் படைத்து அம்மனுக்கு வளைகாப்பு பூஜை நடந்தது. குழந்தை பாக்கியம் வேண்டிய பெண்களுக்கு அம்மனுக்கு அணிவித்த தாலி, வளையல் மற்றும் சேலைகள் வழங்கப்பட்டன. பின் உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் திருவிளக்கு பூஜையும், அம்மனுக்கு புஷ்பார்ச்சனையும் நடந்தன. நேற்று அதிகாலையில் அடசல் பூஜை, சாந்திபூஜையுன் திருவிழா நிறைவுற்றது. விழா ஏற்பாடுகளை சுவாமி ஹரிபகவான் மற்றும் விழாக்குழுவினர் செய்தனர்.