வடமதுரை:தென்னம்பட்டி, பிலாத்து ஊராட்சிகளை சேர்ந்த ஆண்டிபட்டியில் விநாயகர், முனியாண்டி, காளியம்மன், மாரியம்மன் கோயில் சுவாமி கும்பிடு விழா நடந்தது.ஏப்.30ல் துவங்கிய விழாவில் தோரண மரம் நடுதல், பல்வேறு ஊர்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தல், அம்மன் கரகம் பாலித்தல், தீச்சட்டி, மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், நேர்த்திக்கடன் கிடாய் வெட்டுதல் என பாரம்பரிய வழிபாடுகள் நடந்தன. இறுதியாக மஞ்சள் நீராட்டுடன் அம்மன் கரகம் கங்கையில் கரைக்கப்பட்டது.