செஞ்சி: செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் ரேணுகாம்பாள் கோவில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது.
செஞ்சி அடுத்த சிறு கடம்பூரில் உள்ள வடக்கு பார்த்த அம்மன் என்னும் ரேணுகாம்பாள் கோவிலில் கடந்த 9ம் தேதி காப்பு கட்டி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. 10ம் தேதி ஊரணி பொங்கலும், சாகை வார்த்தலும் நடந்து, அன்று இரவு முத்து பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது. 4ம் நாள் விழாவாக நேற்று முன்தினம் 12ம் தேதி காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. இரவு சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. பிரம்மோற்சவத்தின் முக்கிய விழாவான திருத்தேர் வடம் பிடித்தல் வரும் 17ம் தேதி மாலை 4:00 மணிக்கு நடைபெற உள்ளது.விழா ஏற்பாடுகளை சிறுகடம்பூர் பகுதி பொது மக்கள் மற்றும் விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.