மானாமதுரை:மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் சுவாமியை குளிர்விக்கவும்,மழை வேண்டியும் நீராழிபத்தி வழிபாடு நடத்தப்பட்டது.
மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் அக்னி நட்சத்திர வெயில் காலத்தில் சுவாமியை குளிர்விக்கவும், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், மன்னர்கள் காலத்தில் நடத்தப்படும் நீராழிபத்தி வழிபாடு நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும், அபிேஷக ஆராதனைகளும் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் சுவாமி சன்னதியை சுற்றியுள்ள பிரகாரங்களின் உட்பகுதியிலும் மற்றும் நந்திகேசுவரர் சன்னதியிலும் தண்ணீர் நிரப்பி அதில் வெட்டி வேர் போடப்பட்டது. இதனால் சுவாமி மனம் குளிர்ந்து இந்த கோடை காலத்தில் நல்ல மழை பெய்யும் என்பது ஐதீகம்.இதனை பின்பற்றி 70 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் மாலை இந்த வழிபாட்டை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் நடத்தினர்.அன்றைய தினம் மாலை மானாமதுரையில் சிறிது நேரம் மழை பெய்தது.