பதிவு செய்த நாள்
14
மே
2019
02:05
திருப்பூர்:ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று (மே., 13ல்) நடந்த, வில்லுப்பாட்டு நிகழ்ச்சியில், பக்தர்கள் மெய்மறந்து ரசித்தனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி, ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில், வைகாசி விசாக தேர்த்திருவிழா நடந்து வருகிறது. தினமும் மாலை, 6:30 மணிக்கு, கலை நிகழ்ச்சி நடக்கிறது. நேற்று, ஹரியும் ஹரணும் சரணம் என்ற தலைப்பில், வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது.பாரதி திருமகன் மற்றும் யுவகலா பாரதி கலைமகன் குழுவினர், வில்லுப்பாட்டு நிகழ்ச்சியை நடத்தினர்.
காஞ்சி மகாபெரியவர் அருளாசி அளித்த வில்லில், இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். ஹரியும் ஹரனும் சரணம் என்ற தலைப்பில், சிவன் - விஷ்ணு வழிபாட்டு முறைகள், சீதா கல்யாணம், பார்வதி கல்யாணம், மகாபாரதம், கம்பராமாயணம், சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்வுகளை பாடியும், வரலாற்றை கூறியும், வில்லுப்பாட்டு பாடப்பட்டது. பக்தர்கள், மெய்மறந்து ரசித்து, இசையில் லயித்தனர்.