பதிவு செய்த நாள்
14
மே
2019
03:05
ஊத்துக்கோட்டை : ஊத்துக்கோட்டை அடுத்த, தொம்பரம்பேடு கிராமத்தில், மகா கால பைரவர் கோவில் உள்ளது. கோவில் வளாகத்தில், ஆதிபைரவர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி, நவக்கிரகங்கள் ஆகிய சன்னதிகள் உள்ளன.
இன்று, இங்கு சித்திரை தேர் திருவிழா நடைபெற உள்ளது. காலை, 11:00 மணிக்கு, பொங்கல் வைத்து, ஆதி பைரவருக்கு படைத்து வழிபடுவர். முன்னதாக, ஆதி பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும்.பின், மகா கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறும். மூலவருக்கு, சந்தன காப்பு அலங்காரம் செய்து, மகா தீபாராதனை காட்டப்படும்.
மாலை, 5:00 மணிக்கு, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி, வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.