பதிவு செய்த நாள்
14
மே
2019
03:05
திருத்தணி : திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் ஊராட்சிக்குட்பட்ட குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா, நேற்று முன்தினம் (மே., 12ல்) கொடியேற்றத்துடன் துவங்கியது.
காலையில், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்று 13 முதல், 26ம் தேதி வரை, தினமும், மதியம், 2:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, மகாபாரத சொற்பொழிவும், இரவு நாடகமும் நடைபெறும்.
வரும், 15ம் தேதி பாஞ்சாலி திருமணம், 17ம் தேதி சுபத்திரை திருமணம், 20ம் தேதி அர்ஜுனன் தபசு நடக்கிறது. இம்மாதம், 26ம் தேதி காலை, 9:30 மணிக்கு, துரியோதனன் படுகளம், மாலை, 6:30 மணிக்கு, தீ மிதி திருவிழா நடைபெறும்.வரும், 27ம் தேதி பகலில், தர்மர் பட்டாபிஷேகத் துடன், நடப்பாண்டிற்கான தீ மிதி விழா நிறைவடைகிறது