பதிவு செய்த நாள்
15
மே
2019
12:05
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், மழை வேண்டி வருண யாகம் நடந்தது.பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில், ஜென்மோற்சவம் மற்றும் அரசு உத்தரவின்படி மழை வேண்டிய வருண யாகம் நேற்று நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு ருத்ர ஜெபம், காலை, 9:00 மணிக்கு அபிஷேகம், மதியம், 12:00 மணிக்கு தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில், அம்மன் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது.மழைக்காக யாகம்மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டி, வருண ஜபம் மற்றும் வருண யாகம் நேற்று நடந்தது. வருண பகவானை பிரார்த்தித்து ஜபம் செய்ததுடன், யாகம் நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று கூட்டு பிரார்த்தனை செய்தனர்.மேலும், பொள்ளாச்சி பகுதியில் நல்ல மழை பொழிந்து மீண்டும் பசுமை திரும்ப வேண்டும் என, அம்மனுக்கு வெற்றிலை அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.