பதிவு செய்த நாள்
15
மே
2019
02:05
திருத்தணி:திருத்தணி, காந்தி நகர், நல்லதண்ணீர் குளக்கரையில் அமைந்துள்ள கங்கையம் மன் கோவிலில், இந்தாண்டின் ஜாத்திரை, வெகு விமரிசையாக நேற்று (மே., 14ல்), கொண்டாடப்படுகிறது. ஜாத்திரையையொட்டி, காலை, 8:30 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து, காலை, 9:30 மணி முதல் மாலை, 4:00 மணி வரை, திரளான பெண்கள், கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மேலும், அம்மன் பூ கரகம், பேண்டு வாத்தியத்துடன், நகரின் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தது.இதே போல், திருத்தணி அடுத்த, கே.ஜி.கண்டிகை ஊராட்சி, கே.வி.என்.கண்டிகை மற்றும் மாம்பாக்கம் ஊராட்சி, மாம்பாக்கசத்திரம் ஆகிய கிராமங்களில் ஜாத்திரை நடந்தது.
காலை, 8:00 மணிக்கு, மூலவர் கங்கையம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம், கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.மாலையில், கங்கையம்மன் சிறப்பு அலங்காரத்தில், பூ கரகத்துடன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.