பதிவு செய்த நாள்
15
மே
2019
12:05
உடுமலை: உடுமலை, மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடந்தது.பருவ மழைப்பொழிவு குறைந்து, வெயிலின் தாக்கம் அதிகரித்து, வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், அறநிலையத்துறை சார்பில், கோவில்களில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்த அறிவுறுத்தப்பட்டது.அதன் அடிப்படையில், உடுமலை மாரியம்மன் கோவிலில், மழை வேண்டிய சிறப்பு யாகம் நேற்று நடந்தது.
இதையொட்டி, காலை, 9:00 மணிக்கு, சிறப்பு யாக பூஜை நடந்தது.சிவாச்சார்யார்கள் வேத மந்திரங்கள் ஓத, பல்வேறு திரவியங்கள், நவதானியங்கள், ேஹாம குண்டத்தில் இட்டு சிறப்பு யாகம் நடந்தது. மேலும், சிவாச்சாரியார்கள் வருண ஜெபம், மழைப்பதிகம் உள்ளிட்டவை பாடி, வருண பகவானை வழிபட்டனர். தொடர்ந்து, கலச பூஜையில் வைக்கப்பட்ட புனிதநீரால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.