புதுச்சேரி : வரதராஜப் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் இன்று (மே., 15ல்) நடக்கிறது. புதுச்சேரி, காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 33வது ஆண்டு பிரம்மோற்சவ விழா, கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 5ம் நாள் திருவிழாவான நேற்று (மே., 14ல்) மாலை தங்க கருட சேவை நடந்தது.ஆறாம் நாள் திருவிழா இன்று (மே., 15ல்) காலை 10:30 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனமும், மாலை 4:00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இதைதொடர்ந்து, தங்க யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.