வில்லியனூர் : கடப்பேரிக்குப்பம் கிராமத்தில் வரும் 17ம் தேதி தீமிதி திருவிழா நடக்கிறது. சேதராப்பட்டு அருகே உள்ள தமிழக பகுதியான கடப்பேரிக்குப்பத்தில் அமைந்துள்ள திரவுபதிய ம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.நேற்று (மே., 14ல்) பிடாரி மீனாட்சி அம்மனுக்கு ஊரணி பொங்கல் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடந்தது. இன்று (15ம் தேதி) மாலை 3:00 மணியளவில் பகாசூரன் வதம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு வில் வளைத்தல், 7;00 மணிக்கு அர்ச்சுனன், திரவுபதி திருக்கல்யாணமும், தொடர்ந்து சுவாமி வீதியுலா நடக்கிறது.நாளை மறுநாள் (17ம் தேதி) மாலை 3:00 மணிக்கு திரவுபதி அம்மனுக்கு ஊரணி பொங்கலும், மாலை 6:00 மணிக்கு தீமிதி திருவிழா நடக்கிறது. 18 ம்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.