காரைக்கால் ஒப்பில்லாமணியார் கோவிலில் 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2019 02:05
காரைக்கால் : காரைக்கால் ஒப்பில்லாமணியார் கோவிலில் 108 சங்காபிஷேகம் நடந்தது. காரைக்காலில் சவுந்தராம்பாள் சமேத ஒப்பில்லாமணியர் கோவிலில் ஆண்டுதோறும் அகத்திய மகா முனிவருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சிக் கொடுக்கும் வைபவம் கடந்த 10ம் தேதி கணபதி பூஜையுடன் துவங்கியது.
முக்கிய நிகழ்ச்சியாக கடந்த11ம் தேதி ஒப்பில்லாமணியர் மற்றும் சவுந்தராம்பாளுக்கு சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. பின்னர் அகத்திய முனிவர் தென்புலம் செல்லும் நிகழ்ச்சியும், மாலை உச்சிகாளியம்மன் கோவிலிலிருந்து சீர் வரிசை கொண்டு செல்லுதல் பின் அகத்திய முனிவருக்கு சுவாமி -அம்பாள் திருமணக்கோலத்துடன் காட்சித் தரும் வைபவமும் சிறப்பாக நடைபெற்றது. நேற்று (மே., 14ல்) காலை 108 சங்காபிஷேகம்,108 கலசாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.