திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், பெரிய தெருவில், பழமையான, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆரிய வைசிய சங்கத்தின் சார்பில், வாசவி ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது.இந்தாண்டு விழா, நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி, காலை, 6:30 மணிக்கு மேல், மஹா அபிஷேகம், தீப துாப ஆராதனை, அம்மன் வீதி உலா நிகழ்ச்சிகள் நடந்தன.