திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் கிரிவலப் பாதையிலுள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் 27 ம் ஆண்டு வைகாசி உற்ஸவ திருவிழா நடந்தது.இதையொட்டி மே 7 அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்தும், முளைப்பாரி, தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்தனர். நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.