புதுடில்லி : அண்டை நாடான, நேபாளத்தில், இமயமலையில் அமைந்துள்ள, ஹிந்துக்களின் புனித தலமான கைலாஷ் மானசரோவருக்கான யாத்திரை, ஒவ்வொரு ஆண்டும், ஜூன் - செப்டம்பர் மாதத்தில் நடக்கும். இந்த புனித பயணத்தை மேற்கொள்வதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். குலுக்கல் முறையில், யாத்திரிகர் தேர்வு செய்யப்படுவர். இந்த குலுக்கல், டில்லியில் நேற்று நடந்தது. முதல் முறையாக பயணம் செய்வோர் மற்றும் மூத்த குடிமக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், குலுக்கல் நடந்ததாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.