சிதம்பரம் :சிதம்பரம் சுப்ரமணியர் தெருவில் உள்ள மன்மத சுவாமி கோவிலில் குழி மூடும் திருவிழா நடந்தது. சிதம்பரம் சுப்ரமணியர் தெரு மற்றும் காரியபெருமாள் கோவில் தெரு சந்திப்பில் காமன் சுவாமி என்றழைக்கப்படும் மன்மத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் கால்நட்டு மூன்றாம் குழி மூடும் திருவிழா கடந்த மாதம் 23ம் தேதி முதல் நடந்து வந்தது. பதிநான்காம் நாள் திருவிழாவான நேற்று காலை மன்மத சுவாமிக்கு மகா அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மன்மத சுவாமிக்கு சிவன் உயிர் கொடுத்து ரதி தேவிக்கு மாங்கல்ய பிச்சை அளிக்கும் குழி மூடும் திருவிழா நடந்தது. ஏற்பாடுகளை அப்பகுதி மக்கள் செய்திருந்தனர்.