பதிவு செய்த நாள்
17
மே
2019
01:05
தேவையா இந்த பழக்கம்
இன்று மதுக்கடைகள் பெருகியுள்ளது. அது வாழும் காலத்தில் மட்டுமல்ல, வாழ்க்கைக்கு பிறகும் கடும் துயரங்களைத் தரும்.ஒருமுறை, நாயகத்திடம், தைலம் ஷர்ரி (ரலி) என்ற தோழர் வந்தார். "இறை தூதே! நாங்கள் குளிர்பிரதேசத்தில் வசிப்பவர்கள். குளிரைப் போக்க மதுவை அருந்துகிறோம்,” என்றார். அவரிடம் நாயகம், "அந்த மதுவில் போதை இருக்கிறதா?” என்றார். ஆம் என பதிலளித்த தோழரிடம், "அப்படியானால், நீங்கள் அதனைக் குடிக்கக் கூடாது,”என்றார்."சரி...நான் குடிக்கவில்லை. ஆனால், மக்கள் கேட்க மாட்டார்களே,” என்று தோழர் சொன்னதற்கு, "அப்படியானால் குடிப்பவர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யுங்கள்,” என்றார் நாயகம்.குடிப்பவர்களுடன் சண்டை போட்டாவது அவர்களைத் திருத்துவது கடமை என்பது நாயகத்தின் கொள்கை.
* இன்று (மே., 17ல்) நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:38 மணி
* நாளை (மே., 18ல்) நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:17 மணி