நரசிம்மநாயக்கன்பாளையம் சக்தி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2019 02:05
பெ.நா.பாளையம்:நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் விழா நடந்தது.இக்கோவிலின் பொங்கல் விழா நிகழ்ச்சிகள் கடந்த ஏழாம் தேதி பூச்சாட்டுடன் தொடங்கின. தொடர்ந்து, முனியப்பன் சாட்டு நிகழ்ச்சியும், ஆராதனைகளும் நடந்தன.
விழாவையொட்டி, கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.பூக்கம்பம் விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின், கம்பம் சுற்றி ஆடுதல் நடந்தன. வரும் புதன்கிழமை சக்திக் கரகம் அழைத்தல், அன்னதானம், மாவிளக்கு ஊர்வலம் ஆகியன நடக்கின்றன. வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.